தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜனநாயக கடமையாற்ற ரூ.1.70 லட்சம் செலவிட்ட டாக்டர்

ஜனநாயக கடமையாற்ற ரூ.1.70 லட்சம் செலவிட்ட டாக்டர்

ஜனநாயக கடமையாற்ற ரூ.1.70 லட்சம் செலவிட்ட டாக்டர்


ADDED : ஏப் 20, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2024 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார், : கடலுார் செம்மண்டலத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் வினோத், 46; டாக்டரான இவர், நியூசிலாந்தில் கடந்த 10 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு கடலுாரில் ஓட்டுரிமை உள்ளது.

அதனையொட்டி நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ரூ.1.70 லட்சம் செலவிட்டு நியூசிலாந்தில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் நேற்று கடலுாருக்கு வந்த அவர், செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ., ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், வெளிநாட்டில் தமிழகத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது ஓட்டுப்பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபாலில் ஓட்டு போட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us