தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏர்போர்ட் சாலையில் வாய்க்கால் சீரமைப்பு

ஏர்போர்ட் சாலையில் வாய்க்கால் சீரமைப்பு

ஏர்போர்ட் சாலையில் வாய்க்கால் சீரமைப்பு


ADDED : ஏப் 22, 2024 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2024 05:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணல் அரிப்பினால் சரிந்த லாஸ்பேட்டை - சுபாஷ் சந்திரபோஷ் ஏர்போர்ட் சாலை வாய்க்கால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

லாஸ்பேட்டை சுபாஷ் சந்திரபோஷ் சிலையில் இருந்து சாந்தி நகர் நோக்கி செல்லும் ஏர்போர்ட் சாலை போக்குவரத்திற்கு பிரதான சாலையாக உள்ளது. இச்சாலை யொட்டி இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில், மழைக்காலங்களில் வெள்ளம் வடியும். மற்ற நேரங்களில் கழிவுநீர் செல்கிறது.

இச்சாலையில் எக்ஸ் அரசு குடியிருப்பு வளாகத்தையொட்டி உள்ள வாய்க்காலின் தடுப்பு சுவர், கடந்தாண்டு, 25 அடிக்கு நீளத்திற்கு சரிந்து விழுந்தது. அத்துடன் அதிகமான மணல் அரிப்பு ஏற்பட்டு சாலையும் ஒரு பக்கம் சரிந்து பள்ளம் ஏற்பட்டது.

பள்ளத்தை சரிசெய்யாமல் அப்படியே விடப்பட்டது. இவ்விடத்தில் சாலை குறுகி போய், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி கிடைக்காமல் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதையடுத்து, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் சரிந்து விழுந்த வாய்க்கால் சீரமைக்கம் பணி நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us