/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேதராப்பட்டில் குடிநீர் 'கட்' பொதுமக்கள் சாலை மறியல்
/
சேதராப்பட்டில் குடிநீர் 'கட்' பொதுமக்கள் சாலை மறியல்
சேதராப்பட்டில் குடிநீர் 'கட்' பொதுமக்கள் சாலை மறியல்
சேதராப்பட்டில் குடிநீர் 'கட்' பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 20, 2024 04:55 AM

வில்லியனுார்: சேதராப்பட்டில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.
ஊசுடு தொகுதி சேதராப்பட்டில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை குடிநீர் டேங்க் ஆப்ரேட்டர்கள் பணிக்கு வராததால் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் சேதராப்பட்டு பழையகாலனி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானர்கள்.
மாலை 5.30 மணி அளவில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சேதராப்பட்டு மந்தைவெளி பகுதியில் மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சேதராப்ட்டு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்கள் சார்பில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
போலீசார் செல்போன் மூலம் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராமத்திற்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விலகி சென்றனர். இதனால் ஒரு மணிநேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.