/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர் தேக்க தொட்டி பராமரிப்பு 18ம் தேதி குடிநீர் 'கட்'
/
நீர் தேக்க தொட்டி பராமரிப்பு 18ம் தேதி குடிநீர் 'கட்'
நீர் தேக்க தொட்டி பராமரிப்பு 18ம் தேதி குடிநீர் 'கட்'
நீர் தேக்க தொட்டி பராமரிப்பு 18ம் தேதி குடிநீர் 'கட்'
ADDED : ஜூன் 16, 2024 05:53 AM
புதுச்சேரி: ரெயின்போ நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பராமரிப்பு பணியால் 18ம் தேதி குடிநீர் விநியோகம் தடை படும் என, பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்கு உட்பட்ட, ரெயின்போ நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் வரும் 18ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரையில், ரெயின்போ நகர், காமராஜ் நகர், வெங்கடா நகர், செல்லான் நகர், குமர குரு பள்ளம், சுதந்திர பொன் விழா நகர், சரஸ்வதி நகர், ராஜராஜேஸ்வரி நகர், அன்னை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில், குடிநீர் விநியோகம் தடை படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.