/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துத்திப்பட்டில் குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்
/
துத்திப்பட்டில் குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்
துத்திப்பட்டில் குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்
துத்திப்பட்டில் குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 30, 2024 05:32 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
சேதராப்பட்டை அடுத்ததுத்திப்பட்டு கிராமத்தில் இந்திரா நகர் மற்றும் மேட்டு தெரு உள்ளது.
இப்குதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மீண்டும் குடிநீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலை 9:00 மணியளவில் காலி குடங்களுடன் துத்திப்பட்டு--சேதராப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சேதராப்பட்டு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் கருத்தையன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் இந்திரா நகர் மற்றும் மேட்டு தெரு பகுதியில் புதிய குடிநீர் பைப்லைன் உடன் அமைத்து தடையில்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலந்துச்சென்றனர்.
இதனால் ஒரு மணிநேரம் சேதராப்பட்டு சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

