/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருஷ்ணா நகரில் குடிநீர் சப்ளை 'கட்'
/
கிருஷ்ணா நகரில் குடிநீர் சப்ளை 'கட்'
ADDED : ஜூன் 25, 2024 05:33 AM
புதுச்சேரி, : கிருஷ்ணா நகரில் வரும் 27ம் தேதி பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.
பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக் குட்பட்ட கிருஷ்ணா நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 27ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை புதுச்சேரி கிருஷ்ணா நகர் முழுதும், சூரியகாந்தி நகர், வசந்த் நகர், செந்தாமரை நகர், தேவகி நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், எழில் நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இப்பணி நடக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.