ADDED : மே 03, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மடுகரை போலீஸ் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மடுகரை ராம்ஜி நகரில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமை தாங்கினார். மடுகரை சப் இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் முன்னிலை வகித்து, கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளைஞர்களுக்கு விளக்கினார்.
மேலும் இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் ஈடுப்பட்டாலும், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதில், பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.