/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : மே 06, 2024 05:06 AM

திருக்கனுார், : திருக்கனுார் போலீஸ் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் செல்லிப்பட்டில் நடந்தது.
திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கி பேசுகையில், 'கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், குற்றச் சம்பவங்களை தடுக்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது புதுச்சேரியில் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதால், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல், நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல முயற்சிமேற் கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
சப் இன்ஸ்பெக்டர் பிரியா பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான போக்சோ சட்டம் குறித்தும், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவையெனில், உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.
உதவி சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போலீசார் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.