/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : மே 08, 2024 12:11 AM

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் போலீஸ் சார்பில், போதை ஒழிப்பு தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்தது.
நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் முன்னிலை வகித்து பேசுகையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், குற்றச்சம்பங்களை தடுக்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
. பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான போக்சோ சட்டம் குறித்தும், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவையெனில், உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கான கல்வி மற்றும் விளையாட்டு தொடர்பான உதவிகள் போலீசார் மூலம் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், உதவி சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி, போலீசார் மற்றும் ஏரிப்பாக்கம் இளைஞர்கள், மகளிர்கள், மூத்த குடிமக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

