/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுடன் போதை பொருள் தடுப்பு ஆலோசனை
/
பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுடன் போதை பொருள் தடுப்பு ஆலோசனை
பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுடன் போதை பொருள் தடுப்பு ஆலோசனை
பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுடன் போதை பொருள் தடுப்பு ஆலோசனை
ADDED : மே 11, 2024 05:00 AM

புதுச்சேரி: கல்வி நிறுவனங்களில் கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து பள்ளி கல்லுாரி ஆசிரியர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில் கல்லுாரி பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்வி நிறுவனங்களில் கஞ்சா புழக்கம் இருப்பதை தடுக்க ஒவ்வொரு பள்ளி கல்லுாரியிலும் ஆசிரியர் மாணவர்கள் கொண்ட ஒரு குழுவை போலீசார் உருவாக்கி கொடுத்துள்ளனர்.
அதில் 34 கல்லுாரி மற்றும் 100க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு இருந்தும் கல்வி நிறுவனங்களில் புழங்கும் கஞ்சா குறித்த தகவல்கள் போலீசாருக்கு தெரிவதில்லை. இதனால் கல்வி நிறுவனங்களின் போதை பொருள் தடுப்பு வாட்ஸ்ஆப் குழு இருந்தும் செயல்படாத நிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து, போதை பொருள் தடுப்பு போலீஸ் மற்றும் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் ஜெயராம் ஓட்டலில் நேற்று நடந்தது. போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, எஸ்.பி.க்கள் ஜிந்தா கோதண்டராமன், வீரவல்லவன், வம்சீதரெட்டி, பள்ளி கல்வி துணை இயக்குநர் சிவகாமி பங்கேற்றனர். பள்ளி கல்லுாரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பள்ளி கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா புழக்கம் தொடர்பாக எந்த தகவலும் வருவதில்லை.
ஒரு மாணவன் கஞ்சா பழக்கத்திற்கு ஆளானால், நாளடைவில் அதை விற்பனை செய்யும் நபராக மாறிவிடுகின்றான். எனவே, கல்வி நிறுவன வளாகத்தில் கஞ்சா பழக்கம் வருவது தெரியந்தால், உடனவே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குழுவில் தெரிவிக்க பயமாக இருந்தால், போலீசாரின் தனிப்பட்ட நம்பருக்கு வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.