/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு போதை 'ஸ்டாம்ப் சப்ளை' மேலும் 2 கேரள வாலிபர்கள் கைது
/
புதுச்சேரிக்கு போதை 'ஸ்டாம்ப் சப்ளை' மேலும் 2 கேரள வாலிபர்கள் கைது
புதுச்சேரிக்கு போதை 'ஸ்டாம்ப் சப்ளை' மேலும் 2 கேரள வாலிபர்கள் கைது
புதுச்சேரிக்கு போதை 'ஸ்டாம்ப் சப்ளை' மேலும் 2 கேரள வாலிபர்கள் கைது
ADDED : ஆக 31, 2024 02:10 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லுாரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்த வழக்கில், மேலும் இரு கேரளா வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த ஜூன் 29ம் தேதி, ஜிப்மர் மருத்துவமனை அருகே கல்லுாரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்ற சேலம், எருமைப்பாளையம் கோவிந்தசாமி நகர் சங்கீத்குமார்,27; சேலம் கருப்பூர் முஸ்லீம் வீதி கீர்த்திவாசன்,22; ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்பேரில், கோரிமேடு அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்தி கேரளா, பாலக்காடு, ஒட்டாம்பாளையம் ஹைடர்,30; கண்ணுார் முகமது பாசில், 27; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எல்.எஸ்.டி (லைசெர்ஜித் ஆசிட் டைதலமைடு) என்ற போதை ஸ்டாம்ப் 1600, கஞ்சா 250 கிராம், கஞ்சா ஆயில் 180 மி.லி., பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 25 லட்சம்.
தொடர் விசாரணையில், போதை ஸ்டாம்ப் விற்பனையில் மேலும் பலர் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில், கோரிமேடு மற்றும் வடக்கு கிரைம் போலீசார் பெங்களூரிவில் ஜவுளி வியாபாரம் செய்து கொண்டு, புதுச்சேரிக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்து வந்த கேரளா, மலப்புரம், தென்அப்பிளத்தை சேர்ந்த முகமது அஜ்மல் (எ) ஹம்சராஜ், 26; கேரளா வயநாட்டை சேர்ந்த முகமது தாகீர், 31; ஆகிய இருவரை போலீசார் பெங்களூருவில் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியில் போதை ஸ்டாம்ப் விற்பனைக்கு மூளையாக செயல்பட்ட மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.