/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்டேட் சாலை மூடியதை கண்டித்து இ.கம்யூ., மறியல்; போக்குவரத்து பாதிப்பு
/
எஸ்டேட் சாலை மூடியதை கண்டித்து இ.கம்யூ., மறியல்; போக்குவரத்து பாதிப்பு
எஸ்டேட் சாலை மூடியதை கண்டித்து இ.கம்யூ., மறியல்; போக்குவரத்து பாதிப்பு
எஸ்டேட் சாலை மூடியதை கண்டித்து இ.கம்யூ., மறியல்; போக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 22, 2025 10:43 PM

புதுச்சேரி : புதுச்சேரியில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிச லால், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 5 சாலைகள் சந்திக்கும் ராஜிவ் சிக்னலில், காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், லாஸ்பேட்டையில் இருந்து கோரிமேடு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், கொக்குபார்க் சந்திப்பு, வலது புறமாக திரும்பி, தட்டாஞ்சாவடி எஸ்டேட் சாலை பயன்படுத்தி வந்தனர். இதனால், எஸ்டேட் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக வேகமாக இரு சக்கர வானங்களில் செல்பவர்களால், விபத்து ஏற்பட்டது.
அதனால், எஸ்டேட் முக்கிய சாலை (கான்பெட்) அருகே போக்குவரத்து போலீ சார், கடந்த வாரம் பேரி கார்டு மூலம் வழியை அடைத்தனர். அதனை தொடர்ந்து, எஸ்டேட் சாலையில், வாகன நெரிசல் குறைந்ததால், அங்கு பணிபுரிபவர்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், தொழில்பேட்டை சாலையில் வைக்கப்பட்ட பேரிகார்டை, அகற்ற வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில், துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமையில், தொகுதி செயலாளர் தென்னரசன் உட்பட கட்சி நிர்வாகிகள், இ.சி.ஆர்., சாலை, கொக்கு பார்க் சிக்னல் அருகே நேற்று காலை 10:20 மணியளவில், மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, கோரிமேடு, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு, தொழிற்பேட்டை சாலையில் பேரிகார்டுகளை அகற்றியதை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், இ.சி.ஆரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.