/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை
/
பள்ளி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை
ADDED : ஆக 15, 2024 04:35 AM

புதுச்சேரி:கனரா வங்கி சார்பில், அம்பேத்கர் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
புதுச்சேரி கனரா வங்கி சார்பில், அம்பேத்கர் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கம்பன் நகர், சுப்பையா அரசு பள்ளியில் நடந்தது. வங்கியின் துணை பொது மேலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கி, கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக, ஆதி திராவிட நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளை, கல்வி திறனின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்டு 5 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தலா ரூ.3,000, 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி மண்டலத்தின் கீழ் இயங்கும் 53 கிளைகள் மூலம் ரூ.12.72 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. நாடு முழுதும் இத்திட்டத்தின் கீழ் 44,742 மாணவிகளுக்கு ரூ.18 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக, துணை பொது மேலாளர் தெரிவித்தார்.