/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவு நீர் குழாய் அமைப்பு நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
/
கழிவு நீர் குழாய் அமைப்பு நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூன் 28, 2024 06:15 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் புதிய கழிவு நீர் குழாய்கள் அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருமுடி நகரில், முதல் தெரு மற்றும் இரண்டாவது தெருக்களில், புதிதாக கழிவு நீர் குழாய்கள் பதிக்கும் பணி, கழிவு நீர் தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதேபோன்று, சுப்பையா நகர் ஆல்பா பள்ளி அருகில், புதிய கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை தொகுதி எம்.எல்.ஏ., நேரு ஆய்வு செய்தார். பணிகளை விரைவு படுத்தி முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.