ADDED : மே 04, 2026 04:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
: புதுச்சேரி: நடந்து சென்ற முதியவர் மயங்கி கீழே விழுந்து இறந்தார்.
புதுச்சேரி பூங்காவனம் பகுதியை சேர்ந்தவர் விஜயன், 70; டைலர் . கடந்த 30ம் தேதி ஜீவானந்தபுரம் பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்ற போது மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் மூலம், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் இறந்தார். புகாரின் பேரில் டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

