ADDED : மார் 06, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு துாங்கிய முதியவர் தீயில் கருகி இறந்தார்.
புதுச்சேரி, கொசப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்,39; சலவை தொழிலாளி. இவரது தந்தை செபஸ்டியன்,75; நேற்று முன்தினம் மதியம் வீட்டில் துாங்கும்போது, தனது மெத்தை அருகே கொசுவர்த்தியை ஏற்றி வைத்திருந்தார்.கொசுவர்த்தி மெத்தையில் விழுந்து தீ பிடித்து, செபஸ்டியன் மீதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.