sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் விழிப்புணர்வு தமிழ் வாசகப் போட்டி

தேர்தல் விழிப்புணர்வு தமிழ் வாசகப் போட்டி

தேர்தல் விழிப்புணர்வு தமிழ் வாசகப் போட்டி


ADDED : ஏப் 06, 2024 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 05:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையம் செய்திப் பிரிவு, தலை மைத் தேர்தல் அலுவலகம் சார்பில், லோக்சபா வாக்காளர் களுக்கான தேர்தல் விழிப்பணர்வு தமிழ் வாசகப் போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.

ரெட்டியார்பாளையம் தேர்தல் துறை அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, அகில இந்திய வானொலி செய்திப் பிரிவு துணை இயக்குநர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

துணைத் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் தில்லைவேல், ஆதர்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உதவி தமிழ் பேராசிரியர் விஜயராணி, அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எலிசபெத், செந்தில் குமார் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த வாசகங்களை தேர்வு செய்தனர்.

முதல் பரிசாக ரூ.3 ஆயிரம் சத்தியமூர்த்திக்கும், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் முத்துக்கருப்பன், காரைக்கால் இளம்பரிதி, மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் துரைராஜன், அம்பிகாதேவி, லோகேஷ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

விழாவில் சிறப்பு அழைப்பளராக தலைமைத் தேர்தல் அலுவலர் ஜவஹர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் தேர்தல் அன்று அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us