/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாராயணசாமி தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு
/
நாராயணசாமி தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு
ADDED : மார் 22, 2024 05:54 AM
புதுச்சேரி : முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்.,தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில காங்., கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும் பிரசார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் குழு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் முதல்வர் நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் முன்னாள் சபாநாயகர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் வல்சராஜ், வைத்திலிங்கம் எம்.பி., செயல் தலைவர் நீலகங்காதரம், துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், பொது செயலாளர்கள் சங்கர், மோகன்வேல், தனுசு, இளையராஜா, மணவாளன், காரைக்கால் தலைவர் சந்திரமோகன், மகிளா காங்.,தலைவி பஞ்சகாந்தி, இளைஞர் தலைவர் ஆனந்தபாபு, மாணவர் காங்., தலைவர் ஹர்ஷவர்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் பிரசார குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் காங்., நிர்வாகிகள் ஷாஜகான், கமலக்கண்ணன், ரமேஷ் பரம்பத், பாலன், கார்த்திகேயன், பஷீர், கருணாநிதி, அப்துல்ரகுமான், பாஸ்கரன், சூசைராஜ், கல்யாணசுந்தரம், ரஞ்சித், ஐ.என்.டி.யூ.சி., தலைவர் பாலாஜி, ஹசன், ரத்னா, நிஷா, பி.எம்., சரவணன், எம்.பி., சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

