தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் செலவின பார்வையாளர்கள் நாளை புதுச்சேரி வருகை

தேர்தல் செலவின பார்வையாளர்கள் நாளை புதுச்சேரி வருகை

தேர்தல் செலவின பார்வையாளர்கள் நாளை புதுச்சேரி வருகை


ADDED : ஜூன் 28, 2024 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2024 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களின் செலவினம் வரும் 30ம் தேதி இறுதி செய்யப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 75 லட்சம் ரூபாய் வரை வேட்பாளர்கள் செலவு செய்யலாம். புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேச்சை வேட்பாளர்கள் என 26 வேட்பாளர்கள் போட்டியிட்ட சூழ்நிலையில் தொண்டர்களுக்கும், பிரசாரத்திற்கும் லட்சணக்கில் வாரி இறைத்தனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் அதிகம் செலவு செய்யவில்லை. வேட்பாளர்களின் அனைத்து செலவினங்களை, தேர்தல் செலவின பிரிவு கண்காணித்து பதிவு செய்துள்ளது.ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அன்றைய தினமும் முகவர்களுக்கு வேட்பாளர்கள் தாராளமாக செலவு செய்தனர். எனவே அன்றைய தினம் வரை வேட்பாளர்கள் வேறு ஏதேனும் செலவு செய்தாலும், வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என தேர்தல் துறை அறிவுறுத்தி இருந்தது.

ஓட்டு எண்ணிக்கையில் இருந்து 26 நாட்கள் கழித்து முழு தேர்தல் செலவின கணக்கையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 30ம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவின கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

நாளை 29ம் தேதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் புதுச்சேரி வர உள்ளனர். வரும் 30ம் தேதி 26 வேட்பாளர்களும் தேர்தல் கணக்கை இறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மாநில தேர்தல் துறை வாயிலாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுவரை போட்டியிட்ட 26 வேட்பாளர்களில் 20 பேர் முறையாக தேர்தல் செலவினங்களை பராமரித்து இறுதி செய்துள்ளனர். இன்னும் 6 வேட்பாளர்கள் இறுதி செய்யாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us