/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்னணு இயந்திரம் பாதுகாப்பு கல்லுாரியில் தேர்தல் அதிகாரி ஆய்வு
/
மின்னணு இயந்திரம் பாதுகாப்பு கல்லுாரியில் தேர்தல் அதிகாரி ஆய்வு
மின்னணு இயந்திரம் பாதுகாப்பு கல்லுாரியில் தேர்தல் அதிகாரி ஆய்வு
மின்னணு இயந்திரம் பாதுகாப்பு கல்லுாரியில் தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : ஏப் 01, 2024 06:43 AM

புதுச்சேரி, : லாஸ்பேட்டை மின்னனு பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 739 ஓட்டுச்சாவடிகள் உள்ளது. ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அதிகாரிகளை இரண்டாம் கட்ட தற்செயல் கலப்பு முறை பொது பார்வையாளர் பியுஷ் சிங்லா, காவல் பார்வையாளர் அமர்தீப் சிங் ராய், செலவினப் பார்வையாளர்கள் முகமது மன்சருல் ஹாசன், லட்சுமிகாந்தா, தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த தற்செயல் கலப்பு முறையில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கும் பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 5,6,7 ஆகிய தேதிகளில் 8 உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கீழ் 16 மையங்களில் நடைபெறும். இதில் அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளும் பயிற்சி வகுப்பில் தவறாது கலந்துகொள்வது கட்டாயமாகும்.
தவறும் பட்சத்தில் ஓட்டுச்சாவடி மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன்படி சட்டப்பூர்வமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்நநிகழ்ச்சியில், துணை மாவட்ட தேர்தல் அதிகாரி வினயராஜ், நோடல் அதிகாரி முத்துமீனா ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களான லாஸ்பேட்டை மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் அறை மற்றும் ஓட்டு எண்ணும் அறைகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், நோடல் அதிகாரி சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

