/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊழியர்கள் பற்றாக்குறையால் மின் பராமரிப்பு பணி பாதிப்பு
/
ஊழியர்கள் பற்றாக்குறையால் மின் பராமரிப்பு பணி பாதிப்பு
ஊழியர்கள் பற்றாக்குறையால் மின் பராமரிப்பு பணி பாதிப்பு
ஊழியர்கள் பற்றாக்குறையால் மின் பராமரிப்பு பணி பாதிப்பு
ADDED : ஆக 07, 2024 05:25 AM
திருக்கனுார் : திருக்கனுார் மின்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருக்கனுார் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தின் மூலம் மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கொடாத்துார், கைகிலப்பட்டு, திருக்கனுார், மணவெளி, கே.ஆர்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மின் வினியோகம், டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த அலுவலகத்தில் ஊழியர்கள் இடமாற்றம் மற்றும் பணி ஓய்வு காரணமாக தற்போது 3 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், இந்த அலுவலகத்திற்கு தனியாக இளநிலை பொறியாளர் பணியமர்த்தப்படவில்லை.
இதன் காரணமாக இப்பகுதியில் பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டிரான்ஸ்பார்மர் பழுது, மழை நேரங்களில் எதிர்பாராத விதமாக மரங்கள் உடைந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்தால், அதனை சரி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் பற்றாக் குறையால், பல மணி நேரம் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.
இதனால், ஏற்படும் மின்தடையால் மேற்கண்ட கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஆகையால், திருக்கனுார் மின்துறை அலுவலகத்தில் உள்ள ஊழியர் பற்றாக்குறையை போக்கி, பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், இளநிலை பொறியாளரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.