/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை
/
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 16, 2024 05:54 AM
புதுச்சேரி: மின்சாரம் தாக்கி மின்துறை ஊழியர் இறந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்தவர் முருகையன், 53; இவர் முதலியார்பேட்டை மின்துறை அலுவலகத்தில் ஒயர் மேனாக பணி செய்து வந்தார். நேற்று முன்தினம், நுாறடி சாலை, ஜெயமூர்த்தி ராஜா நகர், விரிவாக்கம் பகுதியில் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார். கீழே விழுந்து காயமடைந்த அவரை, அங்கு வேலை செய்த ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அவரது மனைவி சிவகாமி, 20 அடி உயர மின் கம்பத்தில் எந்த உபகரணம் மற்றும் பாதுகாப்பு இல்லாமல், வேலை வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
அதன்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மின் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.