தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி


ADDED : மார் 04, 2025 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2025 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் திருமலைவாசன் நகரை சேர்ந்தவர் ராஜதுரை, 33; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி , சாந்திபிரியா. ஒரு பெண் குழந்தை உள்ளார். சாந்திபிரியா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.

ராஜதுரை நேற்று மதியம், குருவிநத்தம் மேலண்ட வீதியில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரீஷியன் வேலை செய்தார்.

மின் இணைப்பு கொடுப்பதற்காக, ஏணி மூலம் மின் கம்பத்தில் ஏறிய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, ராஜதுரை கீழே மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

அவரது மனைவி சாந்திபிரியா அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us