தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி கொலை வழக்கில் எலக்ட்ரீஷியனுக்கு ஆயுள்

மூதாட்டி கொலை வழக்கில் எலக்ட்ரீஷியனுக்கு ஆயுள்

மூதாட்டி கொலை வழக்கில் எலக்ட்ரீஷியனுக்கு ஆயுள்


ADDED : மே 26, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 06:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மூதாட்டியை வெட்டிக் கொலை செய்த எலக்ட்ரீஷியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி சகுந்தலா, 60; அதே பகுதியை சேர்ந்தவர் யாகஜெயந்தன், 48; எலக்ட்ரீஷியன். இருவருக்குமிடையே கடந்த 2024ம் ஆண்டு மே 18ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக 21ம் தேதி அதிகாலை வீட்டில் தனியாக துாங்கிக்கொண்டிருந்த சகுந்தலாவை, யாகஜெயந்தன் வெட்டிக் கொலை செய்தார்.

பின், சகுந்தலா அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து யாகஜெயந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட யாகஜெயந்தனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 4000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us