தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்துறை அலுவலகம் முற்றுகை

மின்துறை அலுவலகம் முற்றுகை

மின்துறை அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூலை 07, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதை கண்டித்து தாகூர் நகர் மின்துறை  அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தட்டாஞ்சாவடி தொகுதி, லட்சுமி நகர், புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேயம்  மக்கள் கழக பொறுப்பாளர் விநாயகம் முன்னிலையில், பொதுமக்கள்,  தாகூர் நகர் மின்துறை அலுவலகத்தில் நேற்று முற்றுகையிட்டனர்.

அவர்களிடம், மின்துறை அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மின் தொடர்பாக பணிகள் தாமதமாகிறது. ஒரு வாரத்திற்கு மின் வெட்டு பிரச்னை சீர் செய்யப்படும் என, மின்துறை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us