/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமண வரவேற்பு அலங்காரம் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு
/
திருமண வரவேற்பு அலங்காரம் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு
திருமண வரவேற்பு அலங்காரம் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு
திருமண வரவேற்பு அலங்காரம் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு
ADDED : செப் 08, 2024 05:47 AM

கல்யாண வரவேற்பிற்காக மின்சாரத்தை கொக்கி போட்டு திருடுவதால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கோவில் திருவிழாக்கள், பொது கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு குறுகிய கால உபயோக இணைப்புப் பெற்று மின்சாரத்தை உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் டீசல் ஜெனரேட்டர்களை உபயோகிக்க வேண்டும்.
ஆனால், அண்மை காலமாக பொது நிகழ்ச்சிகளுக்கு கொக்கிப் போட்டு மின்சாரத்தை திருடுவது அதிகரித்துள்ளது.குறிப்பாக, திருமண்டபங்களுக்கு வரவேற்பு பேனர், மின் அலங்கார விளக்குகள் வைக்கும்போது, அதற்கு தேவையான மின்சாரத்தை, அங்குள்ள மின் கம்பங்களில், கொக்கி போட்டு திருடுகின்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மழைக்காலத்தில், கொக்கி நழுவி சாலை விழுந்தால், மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது போன்ற மின் திருட்டினால் மின்துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மின் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு மின் திருட்டை தடுக்க வேண்டும். மின் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்க வேண்டும்.