/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஊழியர்களின் பணி தகவல்கள் பராமரிக்க மின்னணு மனிதவள மேம்பாட்டு செயலி
/
அரசு ஊழியர்களின் பணி தகவல்கள் பராமரிக்க மின்னணு மனிதவள மேம்பாட்டு செயலி
அரசு ஊழியர்களின் பணி தகவல்கள் பராமரிக்க மின்னணு மனிதவள மேம்பாட்டு செயலி
அரசு ஊழியர்களின் பணி தகவல்கள் பராமரிக்க மின்னணு மனிதவள மேம்பாட்டு செயலி
ADDED : ஆக 02, 2024 11:37 PM
புதுச்சேரி : அரசு ஊழியர்களின் பணி சம்பந்தமான தகவல்களை பராமரிக்க அரசு மின்னணு மனிதவள மேம்பாட்டு செயலி நடைமுறைப்படுத்த உள்ளது.
பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை குறித்து இடம் பெற்றுள்ள புதிய அறிவிப்புகள்:
புதுச்சேரியில் சீர்மிகு வகுப்பறைகள், துல்லியமான விவசாயம், போக்குவரத்து கண்காணிப்பு, மீன்பிடி, மீனவர் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். பொறியியல், தொழில்நுட்பம், கலை அறிவியல் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் புதிய தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி கூடம் அமைக்கப்படும்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலிகளான டிஜிட்டல் லாக்கர் மூலம் அரசின் ஆவணங்களை மின்னணு முறையில் சேமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும். உமாங் செயலி மூலம் அனைத்து அரசு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் பொதுமக்கள் எளிதில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்களின் பணி சம்பந்தமான தகவல்களை பராமரிக்க அரசு மின்னணு மனிதவள மேம்பாட்டு செயலி நடைமுறைப்படுத்த உள்ளது. இணைய பாதுகாப்பினை உறுதி செய்ய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இணைய பாதுகாப்பு பிரிவு அமைக்கப்படும். இத்துறைக்கு பட்ஜெட்டில் 17.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.