/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த வலியுறுத்தல்
/
உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 17, 2024 02:35 AM
புதுச்சேரி: உயர் கல்வி நிறுவனங்களில் உட்கட்மைப்பினை மேம்படுத்த வேண்டும் என, புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தேசிய அளவில் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சர் டில்லியில் வெளியிட்டார். அதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கல்லுாரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் செயல்திறனைப் பற்றிய மதிப்பீடு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லை.
உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை, உயர்கல்வியின் மையமாக கருதப்படும் புதுச்சேரிக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அவற்றை உண்மை என்று ஏற்றுக் கொண்டு புதுச்சேரி அரசு சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையில் இருந்து உயர்கல்வியின் அத்தியாவசிய சீர்திருத்தங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். கல்லுாரிகளில் தேவையான உள்கட்டமைப்பை வலுப்படுத்த, உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதுமையான ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். கருத்துக்களை பகுப்பாய்வு செய்தல், கல்லுாரிகளின் டிஜிட்டல் மயமாக்கல், கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான தொழில்நுட்பத்தை அதிகரிக்க வேண்டும்.
தொழில்துறை தொடர்பு, மொழியை மேம்படுத்துவதற்கான படிப்புகளை அறிமுகப்படுத்துதல், தகவல் தொடர்பு திறன்கள் அதிகரிக்க வேண்டும். இவற்றை மேம்படுத்தினால் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை வரும் ஆண்டுகளில் மேம்படும்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.