/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2024 01:18 AM
புதுச்சேரி: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் பேசியதாவது:
முதல்வருக்கு ஆலோசனை வழங்க கூடிய கவர்னர் சரியாக அமையவில்லை. கூட்டணி கட்சி அமைச்சர்களும் சரியாக அமையவில்லை. எனவே, எதிர்கட்சியான எங்களிடம் ஆலோசனை பெற்று ஆட்சி நடத்தலாம்.
கவர்னர் உரையில் ரேஷன் கடை திறப்புஎந்த அறிவிப்பும் இல்லை. மக்கள் பணம் கேட்கவில்லை. உணவு பொருள் தான் கேட்கின்றனர்.
கடந்த பட்ஜெட்டில் அறிவித்த மஞ்சள் ரேஷன் கார்டுக்கு பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம் அமல் என்ற அறிவிப்பு இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.
கவர்னர் உரையில், வீட்டின் மாடியில் 500 கிலோ வாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ வாட்டுக்கு 110 சதுர அடி இடம் தேவை. 500 கிலோ வாட்டுக்கு 55,000 சதுர அடி தேவை. கவர்னருக்கு தவறான தகவலை அதிகாரிகள் தந்துள்ளார்களா என்பது தெரியவில்லை.
மின் உற்பத்தியில் சொந்த பயன்பாட்டுக்கு போக, மீதமுள்ள மின்சாரத்தை மின்துறையிடம் விற்பனை செய்து வாடிக்கையாளர்கள் வருமானம் ஈட்டுகின்றனர் என கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
அதுபோல, மின்துறையில் பணம் பெற்ற ஒரு வாடிக்கையாளரையாவது மின்துறை காண்பிக்க முடியுமா?
மரப்பாலம் சந்திப்பு மூப்பனார் சிலை இடமாற்றம்,பிராமணாள் வீதி ஆக்கிரமிப்பு அகற்றி சாலை விரிவாக்கம், வேல்ராம்பட்டு சாலை ஆக்கிரமிப்பு அகற்றி புதிய சாலை, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க துணையாக இருந்த முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு எனது நன்றி தெரிவிக்கிறேன்.
புற்று நோய்க்கு தனி மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. புற்று நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, தனி மருத்துவமனை அறிவிப்பு இந்த ஆண்டிலாவது நடைமுறைப்படுத்தப்படுமா?' என பேசினார்.