/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயில் டிக்கெட் விற்றதில் முறைகேடு டிராவஸ்ஸ் நிறுவன ஊழியர் கைது
/
ரயில் டிக்கெட் விற்றதில் முறைகேடு டிராவஸ்ஸ் நிறுவன ஊழியர் கைது
ரயில் டிக்கெட் விற்றதில் முறைகேடு டிராவஸ்ஸ் நிறுவன ஊழியர் கைது
ரயில் டிக்கெட் விற்றதில் முறைகேடு டிராவஸ்ஸ் நிறுவன ஊழியர் கைது
ADDED : ஜூன் 22, 2024 05:02 AM

விழுப்புரம் : உளுந்துார்பேட்டையில் முறைகேடாக ரயில் பயண சீட்டுகளை முன்பதிவு செய்து, அதிக விலைக்கு விற்ற டிராவஸ்ஸ் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் நேற்று, உளுந்துார்பேட்டை அம்மச்சார் கோவில் தெருவில் உள்ள ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அதில், டிராவல்ஸ் நிறுவனம் ரயில்வே உரிமத்தை தவறாக பயன்படுத்தி, இணைய வழியாக ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அதனையொட்டி, அங்கிருந்த காலாவதியான 15 ரயில் பயண டிக்கெட் உட்பட 39 ஆயிரத்து 117 ரூபாய் மதிப்பிலான டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், டிராவல்ஸ் நிறுவன ஊழியர் உளுந்துார்பேட்டை முருகவேல்,35; என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.