தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருமணம் நிச்சயக்கப்பட்ட வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

திருமணம் நிச்சயக்கப்பட்ட வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

திருமணம் நிச்சயக்கப்பட்ட வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை


ADDED : மே 30, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: திருமணம் நிச்சயக்கப்பட்ட வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த குடியிருப்புபாளையத்தை சேர்ந்தவர் மரியா,72. இவரது மகள் வழி பேரன் கில்பர்ட் சைமன் ஜீயான்,30. இவர், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். மரியா, பேரனுக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து வந்தார். இந்நிலையில், கில்பர்ட் சைமன் ஜீயானுக்கு, கேரளாவை சேர்ந்த ஒரு பெண்னை திருமணம் செய்ய பேசி நிச்சயம் செய்துள்ளனர். திருமண செலவிற்கு, ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும் என்றும் பணம் எங்கு கேட்டாலும், பத்திரம் போன்றவை கேட்கின்றனர்.

பணத்திற்கு என்ன செய்வது, ஒரு வேலை பணம் கிடைக்கா விட்டால் திருமணத்தை நிறுத்த வேண்டி வரும். அதனால் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று தனது பாட்டியிடம் புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி நள்ளிரவு வீட்டிற்கு சென்றவர், படுக்கை அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டார். மறுநாள் 29ம் தேதி காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக அவரது பாட்டி பார்த்துள்ளார். அப்போது, கில்பர்ட் சைமன் ஜீயான், ஓட்டு வீட்டின் கூரையில் உள்ள இரும்பு பைப்பில் போர்வையால் துாக்கு போட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

தகவலறிந்த பாகூர் போலீசார், விரைந்து சென்று, கில்பர்ட் சைமன் ஜூயான் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us