/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா
/
அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா
ADDED : ஆக 05, 2024 04:25 AM

நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் தியாகி தியாகராஜர் நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் உலக புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி சமுதாய நலப்பணித்திட்ட பொறுப்பாசிரியர் ராஜகண்ணா வரவேற் றார். பள்ளி தலைமையாசிரியர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.
மாநில சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக சுற்றுச் சூழல் மையம் நிறுவனம் தலைவர் பாலகங்காதரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
பள்ளி ஆசிரியர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியை சந்தோஷ் நன்றி கூறினார்