ADDED : ஜூன் 13, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்கில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை ஆறுமுகம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு, இணை பொறியாளர் ஜெய்சங்கர், நகராட்சி சுகாதார அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், கழிவுகளை தரம் பிரித்தல், திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாகப் பின்பற்றுதல், துாய்மையைப் பேணுதல் மற்றும் கழிவு மேலாண்மை முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, துாய்மையான, பசுமையான மற்றும் நிலையான புதுச்சேரியை உருவாக்கவும், பேணிக்காக்கவும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
