/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 28, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் கழகம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தமிழ் விரிவுரையாளர் கயல்விழி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சுதா தலைமை தாங்கினார். புதுச்சேரி மூத்த வேளாண் வல்லுநர் சங்கம் தலைவர் கிருஷ்ணகுமார், துணைச் செயலாளர் துரைசாமி, உறுப்பினர் நல்லாம்பிரகாஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் சம்பந்தமான விளக்கங்களை அளித்தனர். மேலும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.
விலங்கியல் விரிவுரையாளர் சத்யவாணி நன்றி கூறினார்.

