/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
34 ஆண்டுகளை கடந்தும் பதவி உயரவில்லை... புலம்பும் போலீஸ் ஏட்டுகள்
/
34 ஆண்டுகளை கடந்தும் பதவி உயரவில்லை... புலம்பும் போலீஸ் ஏட்டுகள்
34 ஆண்டுகளை கடந்தும் பதவி உயரவில்லை... புலம்பும் போலீஸ் ஏட்டுகள்
34 ஆண்டுகளை கடந்தும் பதவி உயரவில்லை... புலம்பும் போலீஸ் ஏட்டுகள்
ADDED : மே 01, 2024 01:35 AM
புதுச்சேரி, : பணியில் 34 ஆண்டுகளை கடந்தும் பதவி உயர்வு இல்லை என, போலீஸ் ஏட்டுகள் புலம்பி வருகின்றனர்.
புதுச்சேரி போலீசில் முக்கிய துறையாக ஒயர்லெஸ் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு, ரேடியோ ஆபரேட்டர், ஒயர்லெஸ் சூப்பர்வைசர் என, பல பிரிவுகளின் பணியாற்றி வருகின்றனர்.
இங்கும் பணியாற்றிய சீனியர் ரேடியோ ஆபரேட்டர்கள் 20 பேருக்கு, 2010ல், அடாக் அடிப்படையில் ஒயர்லெஸ் ஆப்ரேட்டர் கிரேட் 1 சப் இன்ஸ்பெக்டர் பதவி கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு, 2016ல் பணி நியமன விதிகளில் குழப்பம் ஏற்பட்டது. ஒயர்லெஸ் ஆப்ரேட்டர் கிரேட் 1 பணிக்கு, டில்லி யு.பி.எஸ்., யில் அனுமதி பெற வேண்டும் என பணி நியமன விதி திருத்தம் செய்தனர்.
இதனால் 1990 - 1991 ஆண்டுகளில் பணியில் சேர்ந்து 34 ஆண்டுகள் கடந்த சீனியர் ரேடியோ ஆப்ரேட்டர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பழைய முறைப்படி அடாக் முறையில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பதவி உயர்வு மூலம் சம்பளம் கூடுதலாக வழங்க வேண்டியதில்லை. பணி ஓய்வு பெறும்போது, 2 ஸ்டார் கொண்ட சப் இன்ஸ்பெக்டர் என்ற பதவிக்கான கவுரவம் கிடைத்தால் போதும் என்கின்றனர்.
எனவே, சட்டம் ஒழுங்கு, டிராபிக், ஐ.ஆர்.பி.என் காவலர்களுக்கு வழங்கியதுபோல் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள சீனியர் ரேடியோ ஆப்ரேட்டர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.