/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மானியம் பெற முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
/
மானியம் பெற முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
மானியம் பெற முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
மானியம் பெற முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 17, 2024 05:49 AM
புதுச்சேரி : விழாக்கால மானியம் பெற 60 வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
இது குறித்து புதுச்சேரி முப்படை நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
60 வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், விதவையர்களுக்கு விழாக்கால மானியத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் துறை வழங்கிய அசல் அடையாள அட்டை, வங்கி கணக்கு விபரத்துடன் அலுவலகத்துக்கு நேரில் வந்து வரும் 23ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேக்குள் கையொப்பம் இட்டு, நகல் சமர்பிக்க வேண்டும்.
காரைக்கால், மாகி , ஏனாமில் மண்டல நிர்வாக அலுவலகத்தில் விபரங்களை சமர்பிக்கலாம்.
மேலும் விபரங்கள் அறிய புதுவை முப்படை நலத்துறை எண் 0413-2253107, 2250575 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.