/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி ராணுவ வீரர்கள் துாய்மை பணி
/
மாஜி ராணுவ வீரர்கள் துாய்மை பணி
ADDED : ஆக 26, 2024 05:01 AM

புதுச்சேரி: போர் நினைவு சின்னத்தில் துாய்மை பணியில் ஈடுபட்ட முன்னாள்ராணுவ வீரர்கள், புதுச்சேரி அரசின் பசுமை பணிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதிமொழிஏற்றனர்.
புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் சார்பில் கடற்கரை சாலை போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் துாய்மை பணி நடந்தது.
சங்க தலைவர் மோகன் துாய்மை பணியை துவக்கி வைத்தார். முன்னாள் ராணுவ வீரர்கள் போர் நினைவு சின்ன வளாகத்தில் பரவி கிடந்த குப்பைகளை அகற்றினர்.
சங்க உதவித் தலைவர்கள் சுரேஷ்குமார், கந்தசாமி, பொதுச் செயலாளர் செல்வமணி, பொதுநலத் தொடர்பு அதிகாரிராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக முன்னாள் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
பசுமையான மற்றும் தூய்மையான புதுச்சேரியை உருவாக்குவதில் புதுச்சேரி அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.பொதுச் செயலாளர் செல்வமணி நன்றி கூறினார்.