/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி ஆசிரியரின் மனைவியை தாக்கி கொள்ளையடித்த வழக்கு; 7 பேர் கைது
/
மாஜி ஆசிரியரின் மனைவியை தாக்கி கொள்ளையடித்த வழக்கு; 7 பேர் கைது
மாஜி ஆசிரியரின் மனைவியை தாக்கி கொள்ளையடித்த வழக்கு; 7 பேர் கைது
மாஜி ஆசிரியரின் மனைவியை தாக்கி கொள்ளையடித்த வழக்கு; 7 பேர் கைது
ADDED : ஆக 08, 2024 01:56 AM

காரைக்கால் : காரைக்காலில் முன்னாள் ஆசிரியர் மனைவியை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்துார், கந்தங்குடி சாலையை சேர்ந்தவர் ராமலிங்கம். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், ஏல சீட்டு நடத்தி வருகிறார். இவரது மனைவி கனகவள்ளி.
கடந்த 23ம் தேதி இரவு ராமலிங்கம் ஏல சீட்டு பணத்தை கொடுக்க வெளியில் சென்றார். வீட்டில் தனியாக இருந்த கனகவள்ளியை தாக்கிய முகமூடி அணிந்துவந்த நபர்கள், அவர் அணிந்திருந்த 15 சவரன் செயின், பீரோவில் இருந்த 62 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து அம்பகரத்துார் போலீசார் வழக்குப் பதிந்தனர். தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அவர்கள், அம்பகரத்துார் சாகுல், 19; வெங்கடேஷ், 20, என்பதும், அவர்களின் கூட்டாளிகள் அம்பகரத்துார் விஜய், 18, மயிலாடுதுறை ராகுல், 20; ஸ்ரீதர், 22; புகழேந்தி, 20; மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஏழு பேர், கனகவள்ளியை தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 32 சவரன் நகைகள், ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர்.