/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பு
/
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 10, 2024 03:51 AM

புதுச்சேரி : கூடப்பாக்கத்தில் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாக மாநில நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் தேசிய ஜனாநயக கூட்டணி பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாக மாநில நிர்வாகிகள், அவரது ஆதரவாளர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் பா.ஜ.,மாநில செயலாளர் ஜெயக்குமார், கூடப்பாக்கம் கிராமத்தில் நேற்றுமுன்தினம் கோனேரிக்குப்பத்தில் தீவிர ஓட்டு சேகரிப்பினை துவங்கினார்.
இரண்டாம் நாளான நேற்று புதுநகர் பகுதி முழுவதும் வீடு வீடாக தொகுதி நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு சேகரித்தார்.மத்திய அரசின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்துள்ளது.மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.நமச்சிவாயம் வெற்றி பெற்றறால்,மாநிலத்திற்கு அதிக நிதி கொண்டு வருவதுடன் மாநில வளர்ச்சியும் சாத்தியமாகும்.எனவே பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்து ஓட்டு சேகரித்தனர்.
பிரசாரத்தில், தொகுதி பொது செயலாளர் சங்கர்,மகளிர் அணி தலைவி மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

