/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற பயிற்சி முகாமில் விளக்கம்
/
ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற பயிற்சி முகாமில் விளக்கம்
ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற பயிற்சி முகாமில் விளக்கம்
ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற பயிற்சி முகாமில் விளக்கம்
ADDED : மே 25, 2024 03:49 AM
புதுச்சேரி: ஆதித்யா ஐ.ஏ.எஸ்., அகாடமியின் கோடைக்கால பயிற்சி முகாமில், சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்து கலந்துரையாடல் நடந்தது.
ஆதித்யா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஆதித்யா ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், கோடைக்கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதன் நான்காம்கட்ட நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாக துணை பேராசிரியர் செந்தில்குமார் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, 'ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற இந்திய அரசியல் கோட்பாடு, பொருளாதாரம், சமூகவியல் அமைப்பு, பொதுத் துறை ஆட்சியல், பன்னாட்டு வெளியுறவு துறை உள்ளிட்டவைகளை ஆழ்ந்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் நேரம் ஒதுக்கி, 7 மணி நேரம் படிக்க வேண்டும். செய்திதாள்களை படிக்கும்போது தலையங்கம் படித்து டைரியில் குறிப்பெழுதி நினைவில் கொள்ள வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

