/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலை., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
/
பல்கலை., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
பல்கலை., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
பல்கலை., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
ADDED : மே 21, 2024 04:57 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலை,டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 26ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.சி.சி., எம்.டெக்., எம்.பி.ஏ., முதுநிலை நுாலக தகவல் அறிவியல், எம்.எட்., எம்.பி.ஏ., எல்.எல்.எம்., எம்.எஸ்.டபுள்யூ,, சோசியல் ஒர்க் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கும், தடய அறிவியல், அறிவு சார் சொத்துரிமை உள்ளிட்ட முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு, கடந்த ஏப்ரல் 29 ம்தேதி முதல் ஆன்லைனில் விண்ணபங்கள் வரவேற்கப்பட்டன. கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்தனர்.விண்ணப்பிக்க கடந்த 17 ம்தேதியுடன் காலக்கெடு முடிந்தது.இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை டிகிரி படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு வரும் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்ப பதிவினை சரிவர முடிக்காத மாணவர்கள்,புதிய விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் https://www.pondiuni.edu.in/admissions-2024-25/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பங்கள்,தகவல் குறிப்பேடு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
கட்டணம்
பொது, ஓ.பி,சி., இ.டபுள்யூ., பிரிவினருக்கு 250 ரூபாய், ஒவ்வொரு கூடுதல் படிப்பிற்கு 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 150 ரூபாய்,ஒவ்வொரு கூடுதல் படிப்பிற்கு 50 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
மாற்றுதிறனாளிகள்,மூன்றாம் பாலினத்தவருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

