/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எச்டி.,க்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
/
பி.எச்டி.,க்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
ADDED : ஆக 27, 2024 04:17 AM
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலையில் பி.எச்டி.,க்கு விண்ணப்பிக்க வரும் 7ம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலையில் பி.எச்டி., படிப்புகளுக்கு நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மேலும், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், வெக்டார் கன்ட்ரோல் ரிசர்ச் சென்டர், பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், மதர்தெரேசா சுகாதார பட்ட மேற்படிப்பு மையம், காரைக்கால் ஜவகர்லால் நேரு வேளாண் அறிவியல் நிலையம், மணக்குள விநாயகர் டெக்னாலஜி, ராஜிவ் காந்தி கால்நடை அறிவியல் நிலையம் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கும் சேர்த்தே பல்கலைக் கழகம் பி.எச்டி., நுழைவு தேர்வினை நடத்தி வருகின்றது.
இப்படிப்பினை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ தொடரலாம்.
இந்தாண்டிகான பி.எச்டி., படிப்பிற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கடைசி நாள் என்ற நிலையில், அதனை வரும் 7ம் தேதிவரை https://www.pondiuni.edu.in/admissions-2024-25., என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதில் 70 சதவீதம் நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், 30 சதவீதம் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.
விண்ணப்ப கட்டணம் இதர பிரிவினருக்கு ரூ.1,500, பட்டியலினத்தவர்களுக்கு ரூ.750. மாற்றுதிறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.