/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஏப் 18, 2024 11:44 PM
காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் 35 பதற்றமான ஓட்டுச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் மத்திய துணை ராணுவ படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து எடுத்து செல்வது முதல், ஓட்டுப் பதிவு முடிந்து பாதுகாப்பு அறைக்கு கொண்டு வந்து சேர்க்கும் வரை போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் துாரம் வரை யாரும் ஓட்டு சேகரிக்க அனுமதிக்க கூடாது என, சீனியர் எஸ்.பி., மனீஷ் அறிவுறுத்தியுள்ளார்.