/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில் கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கு
/
ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில் கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கு
ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில் கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கு
ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில் கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : செப் 10, 2024 06:44 AM
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலை கல்லுாரியில், தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு விழாவையொட்டி, கருத்தரங்கு நடந்தது.
தவளக்குப்பம் ராஜிவ்காந்திஅரசு கலை கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அரவிந்தர் கண் மருத்துவமனை இணைந்து கண்தான விழிப்புணர்வு பற்றி கருத்தரங்கு கல்லுாரியில் நடந்தது. நாட்டு நலப்பணித் திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் வரவேற்றார்.
கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஹென்னா மோனிஷா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவலட்சுமி சிறப்புரையாற்றினர்.பேராசிரியர் பாலாஜி மதிமாறன் கருத்தரங்கு குறித்து நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக அரவிந்தர் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் வசந்தகுமார் கண்தான விழிப்புணர்வு குறித்தும், கண்தானம் செய்வதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தார். நாட்டு நலப்பணித் திட்ட லாவண்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர் ஞானாம்பிகை, முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யா உதவிப் பேராசிரியை இந்திரா உட்பட கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஜெய் கிருஷ்ணன் நன்றி கூறினார்.