/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ADDED : ஆக 29, 2024 07:22 AM

புதுச்சேரி: கண்தான இருவார விழாவையொட்டி, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் கண்தான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
மருத்துவமனையில், ஆஷா பணியாளர்களுக்கான கண்தான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
கண் பிரிவு தலைமை மருத்துவர் தணிகாசலம் சிறப்புரை நிகழ்த்தினார். மருத்துவர் வர்ஷினி வரவேற்றார்.
மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மருத்துவர் கவிதா, கண் தானம் குறித்தும், கண் தானம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆஷா ஊழியர்களின் பங்கு குறித்து மருத்துவர் செந்தமிழன் ரெனே விளக்கம் அளித்தனர். அதனை தொடர்ந்து, கண்தானம் பற்றி காணொளி, வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிசா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறைதீர்ப்பு அதிகாரி ரவி, மருத்துவர் வர்ஷினி, பிரணிதா உட்பட மருத்துவர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.