போலி மருந்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
போலி மருந்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
ADDED : ஜூலை 17, 2026 11:24 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் புயலை கிளப்பியுள்ள போலி மருந்து வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், கடந்தாண்டு ஆக்ராவில் நடத்திய ஆய்வில், புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பது தெரிய வந்தது. அதன்பேரில், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள், குடோன்களில் சோதனை நடத்தி ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பெண்கள் உள்ளிட்ட 26 பேரை கைது செய்த நிலையில், வழக்கு கடந்தாண்டு இறுதியில் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் ‘கியூ’ பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ஆவணங்கள் இன்றி, ‘பிரிகாபலின்–150’ மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவை புதுச்சேரியில் தயாரித்தது தெரிய வந்தது.
அதன்பேரில், புதுச்சேரி அடுத்த குருமாம்பேட்டில் இயங்கி வந்த ‘மெடினோக் ெஹல்த் கேர்’நிறுவனத்தில், கடந்த 13ம் தேதி இரவு, மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி னர். அதில், போலி மருந்து தயாரித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து, நிறுவன த்தின் உரிமையாளரான புதுச்சேரி சண்முகாபுர ம் பிரபாகரன், 52; என்பவரை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை யில் பிரபாகரன் நடத்தி வந்த குடோனை தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த 14ம் தேதி முதல் மூன்று நாள் சோதனை நடத்தியதில், 625க்கும் மருந்துகள் தயாரித்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
இந்நிலையில், நாட்டையை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள இந்த போலி மருந்து வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார். இதனால், இன்னும் ஓரிரு நாளில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவங்க உள்ளனர்.
