/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவமனையில் குழந்தை சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
/
மருத்துவமனையில் குழந்தை சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
மருத்துவமனையில் குழந்தை சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
மருத்துவமனையில் குழந்தை சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
ADDED : மார் 09, 2025 03:51 AM
புதுச்சேரி : கதிர்காமம் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்பு, தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, 25. நிறைமாத கர்பிணியான இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றார்.
அவரை பணியில் இருந்த மருத்துவர்கள் மருத்துவமனையில் அட்மிட் செய்து, சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று மாலை தமிழ்செல்வி வயிற்றில் இருந்த பெண் குழந்தை இறந்து பிறந்தது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்தது என கூறி, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து சென்று, வாக்குவாததத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.