/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 'ஐ.பி.எல் பேன் பார்க்' நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகம்
/
புதுச்சேரியில் 'ஐ.பி.எல் பேன் பார்க்' நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகம்
புதுச்சேரியில் 'ஐ.பி.எல் பேன் பார்க்' நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகம்
புதுச்சேரியில் 'ஐ.பி.எல் பேன் பார்க்' நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகம்
ADDED : மே 06, 2024 05:52 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை, பெரிய திரையில் கண்டு களிக்கும், ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இந்தியாவில், 50க்கும் மேற்பட்ட நகரங்களில், தற்போது நடக்கும் ஐ.பி.எல் போட்டியை ரசிகர்கள் பலரும், ஒன்றாக இணைந்து பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பை பார்க்கும் வகையில், 'ஐ.பி.எல் பேன் பார்க்' நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி, புதுச்சேரியில் நேற்று முன்தினம் துவங்கியது.
இதை, பி.சி.சி.ஐ., மற்றும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி இணைந்து, தாகூர் அரசு கல்லுாரி மைதானத்தில், நடத்தியது.
நிகழ்ச்சியில், நேற்று மதியம், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான ஆட்டத்தையும், மாலை 6:30 மணிக்கு, கோல்கட்டா மற்றும் லக்னோ அணிகளுக்கான ஆட்டத்தையும், ரசிகர்கள் பெரிய திரையில் இலவசமாக கண்டு களித்தனர்.
பொதுமக்கள் மகிழும் வகையில், டி.ஜே இசை, சிறுவர்கள் விளையாடும் களம், உணவு மற்றும் குளிர்பான கடைகள் என்று பல விதமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் போட்டியை காண வந்திருந்த ரசிகர்களுக்கு முக்கிய வீரர்கள் கை எழுத்து போட்ட, 'டி-ஷர்ட்'டுகள், குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.