sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீராணம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி சென்னைக்கு தடையின்றி குடிநீர் விநியோகம்

/

வீராணம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி சென்னைக்கு தடையின்றி குடிநீர் விநியோகம்

வீராணம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி சென்னைக்கு தடையின்றி குடிநீர் விநியோகம்

வீராணம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி சென்னைக்கு தடையின்றி குடிநீர் விநியோகம்


ADDED : ஜூன் 26, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில், : கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மூலம், டெல்டா கடைமடை பகுதியில் 45,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்தாண்டு கடும் வெயில் காரணமாக பிப்ரவரி மாத இறுதியில் ஏரி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மேட்டூரில் குறைந்தளவே தண்ணீர் இருந்த நிலையிலும், கடந்த மாதம் 17ம் தேதி மேட்டூரில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம், தண்ணீர் திறக்கப்பட்டது. இது 26ம் தேதி கீழணை வந்து சேர்ந்தது. அதே வேளையில், கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணத்திற்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது விவசாய பணிகளுக்கு தண்ணீர் தேவை இல்லாத காரணத்தால் ஏரியின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து தற்போது நிரம்பியுள்ளது.

ஏரியின் மொத்த கொள்ளலவான 1,465 மில்லியன் கன அடியில், 300 மில்லியன் கன அடி நீர் ஏரிக்கு வந்ததும் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவங்கியது.

பின், படிப்படியாக குடிநீர் அனுப்பும் அளவு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரியில் வறண்டு போன வீராணம் ஏரி, நேற்று மீண்டும் ழுழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. தற்போது, கீழணையில் இருந்து ஏரிக்கு அனுப்பி வந்த தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் கீழணையில் தண்ணீர் தேக்கம் அதிகரித்து வருவதால் நேற்று மொத்த கொள்ளளவான 9 அடியில் 7 அடி நிரம்பியுள்ளது.

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், ஏரியில் இருந்து வி.என்.எஸ்.எஸ் மதகு மூலம் சேத்தியாதோப்பு அணைக்கட்டிற்கு 349 கன அடியும், சென்னைக்கு வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மொத்தம் 422 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், சென்னைக்கு தடையின்றி தண்ணீர் அனுப்புவது மட்டுமின்றி, குறுவை சாகுபடிக்கு ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை மற்றும் எதிர்வரும் சம்பா பருவத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்ற நம்பிக்கையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us