ADDED : மே 13, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டில் இருந்த மகளை காண வில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.
முத்தியால்பேட்டை பொன்னம்பல முதலியார் தெருவை சேர்ந்தவர் சைல கிருஷ்ணன்.
இவரது மகள் ரூபஸ்ரீ, 17; இவர் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்த போது, பள்ளியில் இருந்து நின்று விட்டார்.
அவர் தொடர்ந்து, மொபைல் போனை பயன்படுத்தியதால், பெற் றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை காணவில்லை.
இது குறித்து, அவரது தந்தை கொடுத்து புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.